கோலாலம்பூர், ஜூலை.23-
நாட்டின் பிரதான 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது இவ்வாண்டு முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுடன் முந்தைய அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இவ்வாண்டு டோல் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.
எனினும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம், அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் ஏற்று, டோல் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.








