Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் பேட்டரி சேமிப்புத் திட்டம் கட்டாயம்: துணைப் பிரதமர் ஃபடிலா யூசுப் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் பேட்டரி சேமிப்புத் திட்டம் கட்டாயம்: துணைப் பிரதமர் ஃபடிலா யூசுப் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Share:

மலேசியாவின் சூரிய மின்சக்தித் திட்டங்களில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த, பேட்டரி ஆற்றல் சேமிப்பு முறையான பெஸ் கட்டாயமாக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதிலா யூசுப் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் மைக்ரோ எம்எஸ்சி நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த ஹாங்காங்கின் காஸ்பவர் டெக்னாலஜி நிறுவனத்துடன் பிரத்யேக கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய எரிசக்தி மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடிலா யூசுப், நாட்டின் தேசிய எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்கு இத்தகைய பேட்டரி தொழில்நுட்பங்கள் மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மலேசியாவின் மின் விநியோகத்தை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடையவும் இரு நிறுவனங்களும் இணைந்து பெரிய அளவிலான பேட்டரி சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்