மலாக்கா, ஜனவரி.09-
மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள ஒரு Karaoke இன்னிசை விடுதியில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் என்.சிவசங்கரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த அறுவரும் கூடியபட்சம் 4 நாள் வரை தடுப்புக் காவலில் வைப்பற்தற்கு போலீசார் அனுமதி பெற்றனர்.
அந்த Karaoke இன்னிசை மையத்தில் பாடல்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்ததது. இந்தச் சம்பவத்தின் போது, போலீசார் சில ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.








