Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஐ.நா. அகதிகள் கார்டை போலியாக்கிய கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஐ.நா. அகதிகள் கார்டை போலியாக்கிய கும்பல் முறியடிப்பு

Share:

ஜொகூர் பாரு, ஜூலை 02-

மியன்மார் நாட்டின் அரக்கன் இனத்தைச் சேர்ந்த மக்களை இலக்காக கொண்டு அவர்கள் மலேசியாவில் தங்குவதற்கு ஐ.நா.வின் அகதிகள் அட்டைகளை போலியாக தயாரித்து வந்த ஒரு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

மலேசிய குடிநுழைவுத்துறையினர் கடந்த வாரம் ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்த கும்பலைச் சேர்ந்த நால்வரை கைது செய்தனர் என்று ஜோகூர் மாநில இயக்குநர் முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.

மியன்மார், அரக்கன் இனத்தைச் சேர்ந்த 26 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரில் மூவர் ஆண்கள் ஆவர். ஒருவர் பெண் என்று இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ருஸ்டி குறிப்பிட்டார்.

இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அரக்கன் இனத்தைச் சேர்ந்த 35 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவரை குடிநுழைவுத்துறையினர் மீட்டனர் என்று முகமட் ருஸ்டி மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்