Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னர் திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார்

Share:

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் மாமன்னர் பொறுப்பை ஏற்ற சுல்தான் அப்துல்லா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பிற்கு ஏற்ப திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் புகழாரம் சூட்டினார்.

இன்று இஸ்தானா நெகராவில் தொடங்கிய 262 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் ஜோகூர் சுல்தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான்கு பிரதமர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் அரசியல் நெருக்கடி, கோவிட் 19 தோற்று முதலிய பிரச்னைகள் மத்தியில் நாட்டிற்கு மாமன்னராக தலைமையேற்ற சுல்தான் அப்துல்லா மிகுந்த சவால்களுக்கு இடையே தமது சமயோசித முடிவினால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளார் என்று ஜோகூர் சுல்தான் வர்ணித்தார்.

Related News