Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜிஎம் கிள்ளானின் பிரத்தியேக விற்பனைப் பிரச்சாரம்
தற்போதைய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜிஎம் கிள்ளானின் பிரத்தியேக விற்பனைப் பிரச்சாரம்

Share:

இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மேலும் விமரிசையாக்க ஜிஎம் கிள்ளான் மொத்த விற்பனை மையம், "Malaysia Rumah Kita 66" எனும் விற்பனை பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 2, 3 ஆம் தேதிகளில் இந்த விற்பனை பிரச்சாரம் நடைபெறும். பல இன, மதங்களைச் சேர்ந்த அதன் வாடிக்கையாளர்களுக்கு பன்முக தன்மையும் ஒற்றுமையும் கோட்பாடாக கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு சிறப்பு அங்கங்களுடம் நடைபெறும் இந்த இரு நாள் நிகழ்வில் 66 சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன என்பதுடன் இதில் பங்கேற்பதற்கான வழிமுறைகளையும் ஜிஎம் கிள்ளான் மொத்த விற்பனை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பிடதக்க அம்சமாக Merdeka 66 Capsule எனும் பிரத்தியேக அங்கம் இடம்பெறவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் வரும் செப்டம்பர் 2,3 ஆகிய தேதிகளில் ஜிஎம் கிள்ளான் மொத்த விற்பனை மையத்தில் இரண்டு ரசீது இணைப்புகள் வாயிலாக 250 வெள்ளி மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் பொருட்களை வாங்கிருந்தால் அவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.

ஜிஎம் கிள்ளானில் கீழ் தளம் ருவாங் லேங்கார் - ரில் இரண்டு தினங்கள் நடைபெறும் Merdeka 66 Capsule நிகழ்வில் கிள்ளான் வட்டாரமின்றி பிரபகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிணைந்து சுதந்திர தினத்திற்கு மதிப்பளிக்க அனைவரையும் ஜிஎம் கிள்ளான் அழைப்பு விடுத்துள்ளது.

Related News