Oct 14, 2026
Thisaigal NewsYouTube

உலகக் தரவரிசையில் ஏழாம் இடத்தைப் பிடித்தார் சிவசங்கரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.19-

நாட்டின் ஸ்குவாஷ் தாரகை, எஸ் சிவசங்கரி, உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறிய பிறகு உத்வேகத்தைப் பெற்றுள்ளார். இது இதுவரை அவரது மிக உயர்ந்த சாதனையாகும். தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் (PSA) அண்மைய தரவரிசையில், சிவசங்கரி எட்டாவது இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறியுள்ளார்.

கெடா, சுங்கை பட்டாணி பிறந்த 26 வயதான சிவசங்கரி, இந்த மாத தொடக்கத்தில் 2025 சின்சினாட்டி கெய்னர் கோப்பையை வென்றதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போட்டியில், அவர் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஒலிவியா வீவரை அரையிறுதியில் தோற்கடித்து, இறுதி கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமண்டா சோபியையும் தோற்கடித்து, சீசனின் முதல் பட்டத்தைப் பெற்றார்.

தமது அண்மைய தரவரிசை நிலை குறித்து கருத்து தெரிவித்த சிவசங்கரி, இதன் பின்னர் தான் பங்கு பெறும் போட்டிகளில் சிறந்த அடைவுநிலையை அடைய இது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். “இதுவரை எனது உயர்ந்த தரவரிசையை அடைய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அனைத்து கடின உழைப்பும் பலனளித்துள்ளது. தொடர்ந்து எனது தரவரிசை நிலையை மேம்படுத்தி சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்