கூச்சிங், டிசம்பர்.02-
மாஸ் விங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதை அடுத்து, சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான புதிய விமான நிறுவனமான ஏர் போர்னியோ, அடுத்த மாதம் முதல் விமானச் சேவையைத் துவங்கவுள்ளது.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன், சரவாக், சபா மற்றும் லாபுவானில் தற்போதுள்ள கிராமப்புற விமான சேவைகளுடன் இணைந்து ஏர் போர்னியோ தனது விமானச் சேவைகளைத் துவங்கும் என அம்மாநில போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லீ கிம் ஷின் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் ATR 72-500 மற்றும் Twin Otter என்ற இரு விமாங்களும் ஏர் போர்னியோ நிறுவனத்தின் முத்திரை மற்றும் வடிவமைப்புடன் தனது செயல்பாட்டினைத் தொடங்கவுள்ளது.
அதே வேளையில், மீதமுள்ள விமானங்களின் வடிவமைப்பு அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக மாற்றப்படும் என்றும் லீ கிம் ஷின் தெரிவித்துள்ளார்.








