Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கடும் கண்டனத்தற்கு ஆளாகி வருகிறார் சனூசி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடும் கண்டனத்தற்கு ஆளாகி வருகிறார் சனூசி

கோலாலம்பூர், செப்டம்பர் 20-

கெடா மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, பலர் நிவாரண மையங்களில் அனுமதிக்கப்பட்டு, சிரமத்தை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் மாநில மந்திரி பெசார் முஹம்மது சனுசி , ஜப்பான், Kumamoto-விற்கு தனது மனைவியுடன் சென்றிருப்பது, பலத்த விமர்சனங்களுக்கும், கண்டன கணைகளுக்கும் அந்த பாஸ் தலைவர் இலக்காகி வருகிறார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உதவிகளை நல்குவதற்கு மாநில அரசின் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு மாநில மந்திரி பெசார், தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்கு சென்று இருப்பதை பலர் குறைகூறி வருகின்றனர்.

இதனிடையே சனூசி, தனது மனைவியுடன் ஜப்பானுக்கு வருகை மேற்கொண்டு இருப்பது அலுவல் பயணமே தவிர தனிப்பட்ட உல்லாசப் பயணம் அல்ல என்று கெடா மந்திரி பெசார் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →