கோலாலம்பூர், அக்டோபர்.18-
அடுத்த வாரம் 26 ஆம் தேதி தொடங்கி, 28 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் மாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு சுமார் பத்தாயிரம் போலீஸ்காரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த பத்தாயிரம் பேர் போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் உறவுத்துறையினர் என பல்வேறு நிலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள் என்று புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ ஃபிசோல் சால்லே விளக்கினார்.