கோலாலம்பூர், செப்டம்பர்.11-
தலைநகர் கம்போங் சுங்கை பாருவில் இன்று குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட வன்முறையில், டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, சுஸில்மி அஃபெண்டி மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
கம்போங் சுங்கை பாரு மறுவளர்ச்சித் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் எதிர்க்கொண்டு வந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் பலர், இவ்வளர்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், சில தரப்பினர் அதற்கு எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை, காவல் துறையினரின் உதவியோடு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.








