கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
நாட்டில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்தும் நிலை ஏற்படுமானால் தங்கள் நிறுவன அமைப்புகளுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள நிறுவனங்களுக்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








