புத்ராஜெயா, டிசம்பர்.10-
மலேசிய சுற்றுலாத்துறையான Tourism Malaysia-வின் புதிய தலைமை இயக்குநராக முகமட் அமிருல் ரிஸால் அப்துல் ரஹிம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு மலேசிய சுற்றுலாத்துறை சட்டத்தின் கீழ் முகமட் அமிருலின் நியமனத்தை சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் அங்கீகரித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








