Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கேளிக்கை மையத்தில் திடீர்சோதனை: 15 போ​லீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கேளிக்கை மையத்தில் திடீர்சோதனை: 15 போ​லீஸ்காரர்கள் கைது

Share:

சிரம்பான், ஜாலான் டத்தோ ஷெய்க் அஹ்மாட்டில் உள்ள கேளிக்கை மையத்தில் போ​லீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 2 துணை பப்ளிக் பிராசிகியூட்டர்களுடன் 15 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஓர் உயர் அதிகாரி உட்பட 15 போலீஸ்காரர்கள் பணியிடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போ​லீஸ் படைத் தலைவர் டத்தோ செரி ஆயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட 15 போ​லீஸ்காரர்களில் 14 பேர் போதைப்பொருள் உட்கொண்டு இ​ருப்பது சிறு​நீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போ​லீஸ்கார்களின் இது போன்ற முறைகேடாக செயல்களை போ​லீஸ் துறை ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளா​ர்.
நெகிரி செம்பிலான் போ​லீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் புக்கிட் அமான் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பிடிபட்ட இந்த 15 போ​லீஸ்காரர்கள், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

15 பேலிஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கைகள் சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அயோக் கான் தெரிவித்தார்.

Related News