கோத்தா கினபாலு, செப்டம்பர்.11-
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து போது, 13 வயது மாணவியான ஸாரா கைரினா மகாதீர், சுயநினைவுடன் இருந்திருக்கலாம் என தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
ஸாராவின் காயங்களைப் பார்க்கும் போது, அவரது கால்கள் முதலில் தரையில் மோதிய பின்னரே, நிலத்தில் அவரது தலை மோதியிருப்பது தெரியவந்துள்ளது என்றும் டாக்டர் ஜெஸ்ஸி சாட்சியமளித்துள்ளார்.
இதன் மூலம் ஸாரா சுயநினைவுடன் தான் மேலிருந்து விழுந்துள்ளார் என்பதும், ஏற்கனவே மயங்கிய நிலையில் அவர் இருந்திருக்கவில்லை என்பதும் உறுதியாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








