Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயம்

Share:

ஜோகூர், பத்து பஹாட், பாரிட் சூலோங், ஜாலான் பாரிட்டில் புரோட்டோன் வீரா காரை துரத்திக்கொண்டு சென்ற மஸ்டா சிஎஃஸ் ரக கார், கட்டுப்பாட்டை இழந்து அந்த புரோட்டோன் வீரா காரை மோதித்தள்ளிய பின்னர் மற்றொரு காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.48 மணியளவில் நிகழ்ந்தது.

தமக்கு சொந்தமான கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியோடிய புரோட்டோன் வீரா ஓட்டுநரை ஒரு தொழிற்சாலை உரிமையாளரான மஸ்டா சிஎஃஸ் ரக ஓட்டுநர் துரத்திக்கொண்டு சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் பெரோடுவா அக்ஸியா காரில் பயணித்த தம்பதியர் காயம் அடைந்ததுடன், புரோட்டோன் வீரா காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபர் உயிரிழந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

Related News