தமது 10 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், பினாங்கு, பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் நிபோங் தெபால், சங்காட், கம்போங் பகான் புவாயா என்ற இடத்தில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் 8 முதல் 30 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 376 ஆவது குற்றவியல் சட்டத்தின் அந்த லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








