பகாங், ரொம்பின் அருகில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாலான் குவாந்தான் - ஜோகூர் பாரு சாலையின் 137 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் நிசான் அல்மேரா காரை செலுத்திய 34 வயது முகமது ரஹ்மத் அப்துல் ரஹீம் மற்றும் அக்காரில் பயணம் செய்தவரான 31 வயது முஹம்மது அமிருல் முக்மினி மாட் டௌத் ஆகியோர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர். தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மன் தெரிவித்தார்.








