Apr 8, 2026
Thisaigal NewsYouTube
50 லட்சம் ரிங்கிட் லஞ்ச விவகாரம்: தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

50 லட்சம் ரிங்கிட் லஞ்ச விவகாரம்: தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது

Share:

சுமார் 50 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஆய்வுத் திட்டங்களில் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் தனியார் உயர்க்கல்வி கழக விரிவுரையாளர்கள் இருவர் உட்பட நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை உள்ளடக்கிய இந்த கும்பல், ஈப்போ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரியும், பொறியியல் நிறுவன இயக்குனர் ஒருவரும் அடங்குவர்.

2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், சில நிறுவனங்களுக்கு ஆராய்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்காக இவர்கள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் 85 லட்சம் ரிங்கிட் இருப்பு கொண்ட 70 வங்கி கணக்குகளை முடக்கியுள்ள SPRM அதிகாரிகள், ஏழு சொகுசு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆராய்ச்சி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related News

50 லட்சம் ரிங்கிட் லஞ்ச விவகாரம்: தனியார் பல்கலைக்கழக விர... | Thisaigal News