Oct 1, 2026
Thisaigal NewsYouTube

சிறைக் கைதிகளுக்கும் சாரா உதவித் தொகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறைக் கைதிகளுக்கும் சாரா உதவித் தொகை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.11-

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் கூட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதி பெற்ற சிறைவாசிகள், 100 ரிங்கிட்டுக்கான சாரா உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

சிறை நிர்வாகத்தின் உதவியோடு, கடந்த மாதம் அவர்கள் அனைவருக்கும் சாரா உதவித் தொகையின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

Kopen எனப்படும் மலேசிய சிறைத்துறை கூட்டுறவு பெர்ஹாட்டானது, கைதிகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை பெறுதல், தயாரித்தல், விநியோகம் செய்தல் ஆகிய பணிகளுக்காக நியமிக்கப்பட்டதாக சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் அஸிஸ் அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஏற்பாடானது, கொள்முதல் முதல் விநியோகம் வரை, இத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மிகவும் திறமையாகக் கண்காணித்து, அவை நியாயமான முறையில் கைதிகளுக்கு வழங்கப்படுவதை உறுதிச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடெங்கிலும் உள்ள சிறைகளிலுள்ள 67 ஆயிரத்து 934 கைதிகளில், 42 ஆயிரத்து 665 கைதிகள், சாரா திட்டத்தின் மூலம் 100 ரிங்கிட் மதிப்பில், உடைகள், உணவுகள் மற்றும் இன்னும் சில அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுள்ளதாகவும் அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →