தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பாஸ் கட்சிக்கு தாம் அழைப்பு விடுத்து இருந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றிய மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங், தமது அரசாங்கத்தில் இணையும்படி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அழைப்பு விடுப்பதற்கு பிரதமருக்கு உரிமை இருக்கிறது என்று மசீச தலைவர் Datuk Seri Wee Ka Siong தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தனது அமைச்சரவையை அமைப்பதற்கும், அதல் எந்தவொரு மாற்றம் செய்வதற்கும் பிரதமர் முழுழ உரிமைப்பெற்றவராக விளங்குகிறார். பிரதமரின் இந்த முடிவில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்ற முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் குறிப்பிட்டார்.








