அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளை நிரப்புவதற்கு குத்தகை மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றவர்களில் 1,912 பேரை கொண்டு அந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பொதுச் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அ ரசாங்க மருத்துவமனைகளில் இதுநாள் வரை குத்தகைப் பணியாளர்களாக வேலை செய்து வந்த 1,912 பேர் நிரந்தர ஊழியர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








