கோலாலம்பூர், டிசம்பர்.08-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழைப் பயன்படுத்தி, நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலாவது முனையத்தில் நிகழ்ந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.
குடிநுழைவுத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஏஜென்சி மேற்கொண்டு கூட்டு நடவடிக்கையின் போது அந்த மலேசியரின் மோசடி வேலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மலேசியர், மற்றவருக்குச் சொந்தமான இந்தியக் கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்ததாக டத்தோ ஸகாரியா தெரிவித்தார்.








