பெர்சத்து கட்சியின் CIMB மற்றும் Ambank வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதின் யாசினின் அனைத்துலக கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பில் அக்கட்சி தொடுத்துள்ள வழக்கில் வரும் மே 17 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
இரு வங்கிகளின் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெர்சத்து கட்சி தமது வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக பெர்சத்து கட்சி இந்த வழக்கை தொடுத்துள்ளது.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்


