Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி 2026 இல் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி 2026 இல் தொடங்கும்

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ. வின் தரம் உயர்த்தும் பணிகள் வரும் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்விமான நிலையத்தின் பயன்பாடு 90 விழுக்காட்டை அடைந்தவுடன் அதன் மறுசீரமைப்பிற்கான பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் 2050ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலத்திற்குக் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை வரைய, மலேசிய ஏர்போட் ஹோச்டிங்ஸ் பெர்காட் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆலோசக நிறுவனம் ஒன்றை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News