கோத்தா திங்கி, டிசம்பர்.29-
தனது தாயாருக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 30 ஆயிரிம் ரிங்கிட்டைக் திருடிய குற்றத்திற்காக குடும்ப மாது ஒருவருக்கு ஜோகூர், கோத்தா திங்கி, பெங்கெராங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
31 வயது நோர்ஹாசிகின் அபு பாக்கார் என்ற அந்த மாது, தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ஹிடாயாதுல் ஷுஹாடா ஷாம்சுடின் இத்தீர்ப்பை வழங்கினார்.
67 வயதான தனது தாயாருக்கு சொந்தமான தாபுங் ஹாஜி வாரியக் கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் ஒரு லட்சம் ரிங்கிட்டை மீட்டதாக அந்த மாதுவிற்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் தனது தாயாருக்குச் சொந்தமான வங்கியின் ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தி 30 ஆயிரம் ரிங்கிட் வரை மீட்டதாக அந்த மாதுவிற்குச் சொந்தமான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் அந்த மாது ஒப்புக் கொண்டார். குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றயல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றசாட்டப்பட்டிருந்தார்.
இவ்விரு குற்றங்களையும் அவர், கோத்தா திங்கி, பண்ட பெனாவாரில் புரிந்ததாக நீதிமன்றத்தல் தெரிவிக்கப்பட்டது.








