Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது

நவ. 17-

ஒரு செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட காணொலிக் காட்சியில் உள்ள உரையாடல்களை அடிப்படையில், இன்று சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

அவர்களின் வாய்மொழி வாக்குமூலங்கள் இன்று பதிவு செய்யப்பட்டது எனவும் தீவிர விசாரணை தற்போது நடந்து வருவதாகவும் சபா SPRM இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது,

இப்போது வரை, ஒரு குரல் பதிவிலும் மூன்று காணொலிகளிலும் சம்பந்தப்பட்ட ச்ட்டமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்களாக Sindumin சட்டமன்ற உறுப்பினர் Datuk Dr Yusof Yacob, Kemabong சட்டமன்ற உறுப்பினர் Datuk Rubin Blang , Tempasuk சட்டமன்ற உறுப்பினர் Datuk Mohd Arsad Bistari, Tanjung Keramat சட்டமன்ற உறுப்பினர் Datuk Ir Shahelmey Yahya ஆகியோர் எனக் கூறப்படுகிறது.

இப்போது வரை, Dr Yusof, Datuk Rubin, மற்றும் Datuk Mohd Arsad அந்தக் காணொலி தொட்ர்பில் வாக்குமூலம் அளித்துள்ளனர், மேலும் தாங்கள் ஊழலில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளனர். ஆனால், சபா துணை முதல்வர் Datuk Ir Shahelmey, சபா 2025 பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில், அடுத்த அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியிடப்படும் வரையில், இவ்விவகாரம் குஏறித்து யாரும் எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் என சபா SPRM கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →