Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் மருந்து விநியோகம் சீராக உள்ளது: சுகாதார அமைச்சு உறுதி
தற்போதைய செய்திகள்

நாட்டின் மருந்து விநியோகம் சீராக உள்ளது: சுகாதார அமைச்சு உறுதி

Share:

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலால் மருந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், மலேசியாவில் மருந்து இருப்பு தற்போது சீராகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, குறுகிய காலத்தில் இந்த மோதல்களினால் ஏற்படக்கூடிய தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஒப்பந்த விநியோகஸ்தர்கள் மூலம் மேலும் இரண்டு மாதங்களுக்கான கூடுதல் இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. தேசிய மருந்தக ஒழுங்குமுறை முகமையான NPRA கண்காணிப்பின்படி, இதுவரை மருந்து விநியோகத் தட்டுப்பாடு குறித்து எந்தப் புகாரும் வரவில்லை என்றும், விநியோக நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு உறுதி அளித்துள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு