May 24, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பீதியில் மூழ்கினர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பீதியில் மூழ்கினர்

Share:

பாகன் செராய்,ஆகஸ்ட் 26-

சாலையில் திடீரென்று கடந்த ஒரு குரங்கை மோதித் தள்ளுவதிலிருந்து தவிர்க்க காரோட்டி ஒருவர் முயற்சித்த போது, கார் சாலையை விட்டு விழகி பெரிய கால்வாயில் பாய்ந்தது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் காரோடு கால்வாயில் விழுந்து பெரும் பீதியில் மூழ்கியதுடன், அனைவரும் அதிர்ஷ்டவசமாக பொது மக்களால் காப்பாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பேரா, ஜாலான் செலமா-பாகன் செராய் சாலையின் 15 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

மாது ஒருவரினால் செலுத்தப்பட்ட Proton Iriz ரக காரில் அந்த மாதுவுடன் சேர்த்து, ஒரு வயதுக்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு சிறார்கள் உட்பட 6 பேர் இருந்தனர்.

உரிய நேரத்தில் அந்த அறுவரையும் பொதுமக்கள் காப்பாற்றியதால் உயிருடன் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த அறுவரும் செலமா - விலிருந்து பாகன் செராய் - யை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கெரியன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஜூனா யூசாஃப் தெரிவித்தார்.

Related News