Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டத்தோ ஶ்ரீ கோபால் ஸ்ரீ ராமிற்கு புகழ்மாலை சூட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

டத்தோ ஶ்ரீ கோபால் ஸ்ரீ ராமிற்கு புகழ்மாலை சூட்டப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-

மறைந்த முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஶ்ரீ கோபால் ஸ்ரீ ராம், மலேசிய நீதித்துறைக்கு ஆற்றிய சேவைக்காக நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே இன்று புகழ்மாலை சூட்டினார்.

வழக்கறிஞர் தொழில்துறையிலிருந்து நேரடியாக அப்பீல் நீதிமன்ற நீதிபதியாகவும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட கோபால் ஸ்ரீ ராம், சட்டத்துறையின் சின்னமாக விளங்கியர் என்று தலைமை நீதிபதி நினைவு கூர்ந்தார்.

நாட்டின் சட்டத்துறையை வடிவமைப்பதில் கோபால் ஸ்ரீ ராமிற்குக் கணிசமான பங்களிப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டத்துறையில் தான் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு, கொள்கைகள் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை அச்சமின்றி கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டில் மறைந்த கோபால் ஸ்ரீ ராம் வல்லவர் என்று டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் புகழ்மாலை சூட்டினார்.

தனிப்பட்ட முறையில் கோபால் ஸ்ரீ ராம் ஒரு நீதிபதி மட்டும் அல்ல, ஒரு சிறந்த நண்பர், ஆசிரியரும் கூட. சட்டத்துறையில் அவர் நேர்மை மற்றும் துணிவின் அடையாளமாக விளங்கியவர்.

அவரின் தீர்ப்பு ஒவ்வொன்றும் நுண்ணறிவு மிக்கதாகும் என்று தலைமை நீதிபதி வர்ணித்தார்.

இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் நடைபெற்ற Quintessential Gopal Sri Ram எனும் கோபால் ஸ்ரீ ராம் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.

Related News