Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெ.20 வெள்ளிக்கு விற்கப்பட்ட கோழி பொரியல்
தற்போதைய செய்திகள்

வெ.20 வெள்ளிக்கு விற்கப்பட்ட கோழி பொரியல்

Share:

லங்காவி, பந்தாய் செனாங்கில் உள்ள ஓர் உணவு வளாகத்தில் பொரித்த கோழி இறைச்சி 20 வெள்ளிக்கு விற்கப்படும் வியாபாரி மீது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவு அமைச்சகம் (KPDN) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொரித்த கோழி இறைச்சி 20 வெள்ளி, சோறு 3 வெள்ளி, நீர் 1 வெள்ளி என்கிற ரசீது ஒன்று சமூக வலைத்தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தது இரண்டு நாட்களாக பரவலாகி வருகின்றது.

அக்கடையில் சாப்பிட்ட உணவின் விலை ஏற்புடையதாக இல்லை என்றும் மற்றவர்களும் குறிப்பிடபட்டுள்ள கடையில் சென்று சாப்பிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர் முகநூலில் கேட்டு கொண்டார்.

இதுக்குறித்து KPDN- க்கு தகவல் தெரியவந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட உணவு உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெடா, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவு அமைச்சகத்தின் அதிகாரி எஃபென்டி ரஜ்னி காந்த் கூறினார்.

இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என்று எஃபென்டி ரஜ்னி தெரிவித்தார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்