May 22, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதி குடும்ப மாது மரணம்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி குடும்ப மாது மரணம்

Share:

செகாமாட், மார்ச் 2 -

ஜோகூர், செகாமாட், ஜாலான் முவார் செகாமாட் சாலையின் 54 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு காரோட்டியான குடும்ப மாது உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் ஜெமெந்தா எண்ணெய் நிலையம் அருகில் டிரெய்லர் லோரி, கார் சம்பந்தப்பட் இந்த விபத்தில் காரை செலுத்திய 35 மாது தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

தங்காக் கை நோக்கி செல்வதற்காக டிரெய்லர் லோரி ஒன்று,சாலையின் அவசரத் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து இ​ருக்கலாம் என்று நம்பப்படும் அந்த மாது செலுத்திய கார், அந்த கனரக வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக செகாமாட் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமட் சம்ஸ்ரி மரின்சான் தெரிவித்தார்.

இதில் 61 வயது லோரி ஓட்டுநர் காயம் அடையவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News