Dec 30, 2025
Thisaigal NewsYouTube
ஆயுதமேந்திய கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ருசாபாய் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஆயுதமேந்திய கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ருசாபாய் கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.30-

ஆயுதமேந்திய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ருசாபாய் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் அறிவித்துள்ளது.

இந்த கும்பலுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கும்பலின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 -ஆம் தேதி வரையில், புக்கிட் அமான் மற்றும் கெடா மாநில போலீசார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பலில், சுமார் 35 உறுப்பினர்கள் செயலில் இருப்பதாகவும், அவர்கள் சுங்கை பட்டாணி, பினாங்கு போன்ற பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் டத்தோ குமார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது முதல் 42 வயதுடையவர்கள் என்றும், இவர்களில் 7 பேர் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து விடுதலையானவர்கள் என்றும் டத்தோ குமார் நேற்று கூட்டரசுப் பிரதேச போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில், இக்கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 36 வயதான ரமேஸ் கோவிந்தா ராஜன் என்ற நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.

Related News