Oct 15, 2026
Thisaigal NewsYouTube

காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்

ஜன.3-

கோலா சிலாங்கூரில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை காவல் துறை உறுதி செய்துள்ளனர். அந்த அதிகாரி வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என சிலாங்கூர் மாநில காவல் துறையின் தலைவர் Datuk Hussien Omar Khan தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறை இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார் Datuk Hussien.

காவல் துறை சாட்சிகளின் வாக்குமூலங்களையும், சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும் அறிக்கையை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். .

உயிரிழந்தவர் சுகாதார நிலைய ஊழியர் என்றும், கிள்ளானிலிருந்து கோலா சிலாங்கூருக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்