போலிடெக்னிக் மற்றும் கோலேஜ் கொமுனித்தி ஆகிய தொழிற்நுட்பக் கல்லூரிகளில் 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த சமூக கல்லூரிகள் இலாகா தெரிவித்துள்ளது. புதிய மாணவர் சேர்ப்பு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாணவர்களின் அதிகரிப்பு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பதிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என்று உயர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 26, 539 மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 634 ஆக இருந்தது என்று அந்த இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


