மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன் தற்காலிகமாக தனது சேவையை நிறுத்திக்கொண்டு இருப்பது உள்ளூர் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏர் ஆசியா விமான நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் பயணிகளின் அபரிமித ஆதரவை பெற்று இருந்த மைஏர்லைன் விமான நிறுவனம், மிக மலிவான கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காவி உட்பட எட்டு வழிதடங்களுக்கு தனது சேவையை மேற்கொண்ட மைஏர்லைன் மீண்டும் தனது சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் தங்களின் முகநூல் வழி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.








