ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.26-
அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் அரசாங்க இலாகாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு பினாங்கு எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்த இயக்குநர், விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செபராங் பிறை உத்தாராவில் பொறுப்பு வகித்து வந்த போது அவர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இலாகா அளவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு உணவு விநியோகிக்கும் குத்தகையைத் தனது கணவரின் நிறுவனத்தற்கு வழங்கியதாக அந்தப் பெண் இயக்குநருக்கு எதிராகக் கூறப்படுகிறது.








