தாவாவ், ஆகஸ்ட்.22-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சபா, லாஹாட் டாத்துவில் உள்ள ஒரு தொழிற்பயிற்சிக் கல்லூரியில் 17 வயது மாணவன் நஸ்மி ஐஸாட் நருல் அஸ்வானைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பதின்ம வயதுடைய 13 மாணவர்களும் குற்றவாளிகளே என்று தாவாவ் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இந்த 13 மாணவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி காலை 7.35 மணியளவில் பள்ளியின் தங்கும் இடத்தில் இந்த 13 மாணவர்களும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த 13 மாணவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டன்கன் சிகோடாய் தெரிவித்தார்.








