முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள மலாய் பிரகடனம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.
மலாய் பிரகடனம், ஒற்றுமை அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவும் , கவிழ்ப்பதற்காகவும் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் நோக்கத்தை கொண்டதே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
அன்வார், நாட்டின் பிரதமரானதை மகாதீரால் ஜீரணிக்க முடியாமல், மனதிற்குள் புளுங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.
ஓரங்கங்கப்பட்ட மலாய்க்காரரர்களைக் காப்பாற்றுவதற்காக மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டுள்ளது என்று மகாதீர் கூறுகிறார். ஆனால், மலாய் பிரகடனத்தை மிக ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால் அது மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்டுள்ள பிரகடனம் அல்ல. மாறாக, அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பின்னணியைக் கொண்டதாகும் என்று டாக்டர் இராமசாமி விளக்கினார்.
அடக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்குத் தன்னால் மட்டுமே முடியும் என்று துன் மகாதீர் மனப்பால் குடித்து வருவதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


