கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பினாங்கு, சிட்டி அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து விளையாட்டுப் போட்டி நிறைவுப்பெற்றப் பின்னர் அப்பகுதியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பாக பினாங்கு எவ்.சி அணி மற்றும் கெடா டாருல் அமான் அணி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் கெடா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறிய இரு அணியை சேர்ந்த ரசிகர்கள் திடீரென்று சண்டையிட்டுக்கொண்டதுடன் அவர்களின் இந்த சண்டை அருகில் உள்ள பெட்ரோல் எண்ணெய் நிலையம் வரை நீடித்தது. ஒருவரை நோக்கி ஒருவர் கற்களை வீசி எறிந்து கொண்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் காயத்திற்கு ஆளாகினர்.பிடிபட்ட 18 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 20 பேரும், இன்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் வைப்பதற்கு போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


