Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தம்பிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தம்பிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

இளைஞர் ஒருவர் தனது தம்பியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

24 வயது கே. சரணியதேவன் என்ற அந்த இளைஞர், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.49 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் கெந்திங் கிள்ளான், கம்போங் பாரு ஆயர் பானாஸில் உள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் 21 வயதுடைய தனது சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் சரணியதேவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது தம்பி அளித்த புகாரின் பேரில் சரணியதேவன், அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். மன உளைச்சலினால் தாம் இத்தகைய விபரீத செயலில் ஈடுபட்டதாக சரணியதேவன் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரின் மனோநிலையை சோதிக்க மனநல மருத்துவமனைக்கு அனுப்புமாறு மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முஹமட் டான் துணை பள்ளிக் பிராசிகியூட்டருக்கு உத்தரவிட்டார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு