அலோர் ஸ்டார், செப்டம்பர்.13-
தனது முன்னாள் மனைவியையும் ஆடவரையும் வெட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். அலோர் ஸ்டார், குவார் செம்பெடாக், தாமான் நோனாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த 29 வயதுடைய நபர் நேற்று காலை 9.45 மணியளவில் கோலத் திரங்கானுவில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.








