Sep 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய மலேசியா அதிரடி திட்டம்
தற்போதைய செய்திகள்

புதிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய மலேசியா அதிரடி திட்டம்

Share:

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்வதற்கு புதிய வியூகமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியா ஆராய்ந்து வருகிறது. அதே வேளையில், வரும் ஜூலை இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்பு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகப் பொருளாதாரத் துறை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்துள்ளார்.

விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியதை, அதற்கு மேல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால், மலேசியா நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களைத் தவிர்த்து வருகிறது. பெட்ரோனாஸ் நிறுவனம் புதிய விநியோக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியவுடன் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா குறிப்பிட்டார்.

புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் நாட்டில் ரோன்95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 என்ற நிலையான விலையிலேயே நீடிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்