புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர்.02-
மது போதையில் நான்கு வாகனங்களை மோதி, விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.
நேற்று இரவு 11.55 மணியளவில் பாயான் லெப்பாஸ், ஜாலான் கெனாரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய நபர் செலுத்திய ஹோண்டா அக்கோர்ட் வாகனம், புரோட்டோன் X70 ரக வாகனம் உட்பட நான்கு வாகங்களை மோதித் தள்ளியது. அந்தக் காரைச் செலுத்திய நபர் மது போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார், மது போதையில் தடுமாறிய நிலையில் காணப்பட்ட அந்த நபரைக் கைது செய்ததாக சஸாலி அடாம் குறிப்பிட்டார்.








