Sep 27, 2026
Thisaigal NewsYouTube
BUDI95 முறைப்படி டீசல் மானியம்: ஆய்வு செய்ய நிதி அமைச்சுக்கு   உத்தரவு
தற்போதைய செய்திகள்

BUDI95 முறைப்படி டீசல் மானியம்: ஆய்வு செய்ய நிதி அமைச்சுக்கு உத்தரவு

Share:

தற்போது டீசல் மானியம் 'BUDI Individu' மற்றும் 'BUDI Diesel' ஆகிய திட்டங்களின் கீழ் நேரடி பணப் பரிமாற்றமாக வழங்கப்படுகிறது. இதனை மாற்றி, RON95 பெட்ரோலுக்குப் பயன்படுத்தப்படும் BUDI95 செயல் முறையைப் போலவே மிகவும் எளிமையான மற்றும் திறன் வாய்ந்த ஒரு முறைக்கு மாற்றுவது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இந்த புதிய முறை பொதுமக்களுக்கு, குறிப்பாக 'ஃபோர்-வீல் டிரைவ்' (4WD) அல்லது பிக்கப் டிரக் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் நிலையங்களில் நேரடியாகப் பலன் பெற மிகவும் எளிதானதாக இருக்கும் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி குறிப்பிட்டார்.

டீசல் கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், மானியம் தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எல்லைப் பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர் அபாயம் கொண்ட எரிபொருள் நிலையங்களில் கடத்தலைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சு, இது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வாரம் நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கை குழு கூட்டத்திலோ அல்லது அமைச்சரவைக் கூட்டத்திலோ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்பிடித் துறைக்கு மட்டும் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து சற்றே மாறுபட்ட ஒரு மானிய முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பதையும் அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்