Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உயர் நீதிமன்ற உத்தரவைப் போலீஸ் துறை அமல்படுத்தும்
தற்போதைய செய்திகள்

உயர் நீதிமன்ற உத்தரவைப் போலீஸ் துறை அமல்படுத்தும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுடிஎம் பயிற்சியாளர் ஷாம்சுல் ஹரிஸ் ஷாம்சுடின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு அந்த மாணவரின் உடலைத் தோண்டுவதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவைப் போலீஸ் துறை நடைமுறைப்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீரின் சடலத்தைத் தோண்டுவதற்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தியது போல, ஷா ஆலாம் நீதிமன்றத்தின் முடிவை அமல்படுத்த போலீசார் கடமைப்பட்டுள்ளனர் என்று சைஃபுடின் விளக்கினார்.

போலீஸ் படைத் தலைவர் அல்லது அவரின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களின் தீவிர கண்காணிப்புடன் சிலாங்கூர், கம்போங் ரிஞ்சிங்கில் உள்ள முஸ்லிம் கல்லறையிலிருந்து அந்த மாணவரின் உடலைத் தோண்டுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் கருத்துரைக்கையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

Related News