ஈப்போ, பிப்ரவரி.18-
ஈப்போ, புந்தோங் பகுதியில் ஸ்ரீ அன்னப்பூரணி ஆலய நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் பராமரிப்பு மையம் ஒன்று திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையினால் மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்ததன் காரணமாக, மையத்தில் இருந்த படுக்கைகள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உணவு, சுத்தமான உடை மற்றும் மருத்துவ உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீளவும், சேதமடைந்த பொருட்களைச் சரி செய்யவும் தாராள மனதுடையவர்கள் முன்வந்து உதவ வேண்டும் என அந்த மையத்தின் நிர்வாகிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.








