வயது குறைந்த சிறார்களை ஒருதலைபட்சமாக மதம் மாறுவதற்கு அனுதிக்கும் சில மாநில இஸ்லாமிய சட்டங்களின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் வழக்கு தொடுத்து இருக்கும் தனித்து வாழும் தாயாரான இந்திரா காந்தி மற்றும் இதர 13 வாதிகளின் வழக்கில் குறுக்கிடுவதற்கு கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்திற்கும், ஜோகூர் மாநில இஸ்லாமிய சமய மன்றத்திற்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
பெற்றோரில் இருவருமே அனுமதித்தால் மட்டுமே ஒரு குழந்தை மதம் மாற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட முடியும் என்ற ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் பெர்லிஸ் போன்ற சில மாநிலங்களில் பெற்றோரில் கணவன் அல்லது மனைவி அனுமதித்தால் அந்த குழந்தையை மதம் மாற்ற முடியும் என்று மாநில சட்டம் வலியுறுத்துகிறது.
அத்தகைய மாநில சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் இந்திரா காந்தியும், .இதர 13 தரப்பினரும் இவ்வழக்கை தொடுத்துள்ளனர்.








