Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

கோலாலம்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற நகைச்சுவைக் கிளப்பின் பெண் படைப்பாளரான சித்தி நூர் அமிரா அப்துல்லா, நிகழ்ச்சியின் போது தமது மேலாடையைக் களைந்த குற்றத்திற்காக அவருக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
நகைச்சுவைக்காக ஆடைகளைக் களைவது போன்று பாவணை செய்த சித்தி நூர் அமிராவின் அந்த நடிப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியிருந்த சித்தி நூர் அமிரா, இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு நீதிபதி என்.பிரிசில்லா ஹேமா மாலினி அபராதம் விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News