80 ஆயிரம் வெள்ளிகக்கும் அதிகமான போதைப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்படும் முயற்சியை மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.
நண்பகல் 1.00 மணி அளவில் அந்தப் போஹைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று சுங்கத் துறை அமலாக்கப் பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான வோங் புன் சியான் கூறினார்.
59 போட்டலங்களில் 1.013 கிலோ கீராம் எடை கொண்ட ஹிரோயின் வகை போதைப் பொருள் ஒரு அட்டைப் பெட்டியில் மஐத்து வைக்கப்பட்டிருந்தன என வோங் புன் சியான் தெரிவித்தார்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியிம் சுங்கத் துறை ஈடுபட்டு வருகிறது.








